இந்திய பேரரசின் கீழ் அடிமையாக இருக்கும் மற்றும் ஒரு கையாலாகாத தமிழன்...............
"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.
என்னை பற்றி எழுதும் அளவுக்கு இன்னும் எழுத்தாசிரியர் பிறக்கவில்லை, எழுதப்படும் அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. காத்திருக்கிறேன் சாதனை செய்ய!!!
என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...
இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..
தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.
anand,Babylon International, Raipur, C G
No comments:
Post a Comment