இழக்க என்ன இருக்கிறது...
உயிரை இழக்க துணிந்த கூட்டம்...
ஈழம் அதனை மீட்டெடுக்க...
தூக்கம் துறந்த புனித கூட்டம்...
மலட்டுப் பெண்ணும் கருத்தரிப்பாள்...
மாவீரனை அவள் ஈன்றெடுப்பாள்...
மண்ணை காக்கும் மறத்தமிழன்...
மானமிழந்தால் கொதித்தெழுவான்...
சகலம் துறந்த சந்ததியர்...
சமுத்திர கரையில் சிதைந்தவன் ஆணான்...
சரித்திரம் இருந்தும் தொலைந்தவன் ஆணான்...
தரித்திரம் அவர்களை துரத்த துரத்த...
போராளி என புலம்பெயர்ந்தான்...
கோழை வர்க்கம் கொக்கரிக்க...
சீறும் புலியாய் சினவெடுத்தான்...
தமிழுக்கென ஒரு தேசம் கண்டான்...
அதை ஈழம் என்றே மார்தட்டினான்...
No comments:
Post a Comment