என்ன இந்த காலப்போரட்டம் ...
என் சாதியின்
பதுங்கு குழியெல்லாம்
பாடைகுழிகளாய் ....
கருவில் இருந்து கூட என் இனம்
கருகியே பிறக்கிறதே!
அன்று முறத்தால் அடித்த இந்த கரத்தில்
இன்று அதுவாய் மாறி துப்பாக்கிகள்...
உலகாண்ட என் சாதி இன்று
உலகமெங்க்கும் அகதிகளாய்...
எண் சொல்ல என் இனத்தின் பாடுகளை...
கேட்டு பாருங்கள் கண்ணீர் வடிக்கும் ஏடுகளை...
அப்பா இறந்து கிடந்தால்
அழக்கூட முடியாது...
அழகுதங்கையின் கற்ப்புக்கு
ஆண்டவன்தான் காவல்...
ஈழத்து தேசமெங்கும் வெண் கற்கள்..
அடடா! அது இறந்து என்சாதின் பற்கள்..
வன்னி வனமெங்கும் வெள்ளை விறகுகள் ..
கண்ணீரோடு சொல்கிறேன் அது என்சாதி எலும்புகள்...
அன்று ஒருநாள் என் இனம்
உலமெங்கும் புகழ் பரப்பியது ...
இன்று உலகமெங்கும் ஓலமிடுகிறது...
தமிழனின் இரத்தத்தில் கொலமிடுகிறது...
ஆணையிரவு இரவுகளுக்கு தெரியுமா ?
இழக்கப்பட்ட என் சாதி கற்பின் எண்ணிகையை ..
கிளிநொச்சியின் கிளிகளெல்லாம் சொல்கிறது...
இறக்கும் என்சாதியின் இன்னல்களை...
முல்லைத்தீவு எங்கும்
மொய்க்கின்ற கழுகுகளுக்கு தெரியுமா ? - அது
ஒருஇனப்போராட்டத்தின்
இறைச்சி என்று ...
வன்னி காட்டு மரக்கிளைகளே
உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் சுமப்பது என்
சொந்தம்களின் சதைஎன்று...
யாழிசை கூட ஒப்பாரியாக
யாழ்ப்பான சோகத்தை மீட்டும்...
அடடா தமிழா! எந்த நெருப்புடா - இதயத்தில்
இனவுணர்வினை ஊட்டும்...
கூப்பிடும் தூரத்தில்
கோடி சனமிருந்தும்...
வீதியெங்கும் கிடக்குதடா
நாதியின்றி தமிழனின் பிணம்...
என் இனம் செய்த அவலம் என்ன?
இறைவா நீ சொல்லிவிடு -இல்லையேல்
என் இனத்தை
கருவிலேயே கொன்றுவிடு ...
கவரிமாண் அவளின்
கற்ப்பினை காக்க
இறக்க கூட சுதந்திரம் இல்லாத போது
இறைவா நீ இங்கு தேவையா ?
பாஸ்பரஸ் குண்டுகளில்
பறிபோகும் என் சாதிக்காக
பரஸ்பர அறிக்கை வெளியீடு -
இறைவா அரசியல் சாதியினை
அழித்திட வரம்கொடு...
அங்கே கொன்றுகுவிக்கும் அந்த
தலைகளை பொறுக்கி
இங்கே வாக்கு பெட்டியை
நிறைக்கிறான் வாக்குபொருக்கி..
வாசலுக்கு வரும்
வாக்கு பிச்சைகாரனே
வராதே என் வீட்டிற்கு... வந்தால்
செற்றிடுவாய் சுடுகாட்டிற்கு ...
கடல் ஒன்றும் தூரமில்லை
காளைகலாம் எங்களுக்கு - ஆயுதம்
கைமீது எடுத்துவிட்டால்
கருமாதி உங்களுக்கு ...
ஈழத்து குருதியலே
ஏழுகோடி எழுதுகிறான்
அரசியல் சாசனத்தை... அன்புடையீரே
நீங்களிடும் வாக்கினால்
காப்பாற்றலாம் நம் இனத்தை...
காமத்து தலைவனை
காணவில்லை என்பதற்கு
நாற்பதாயிரம் பெண்களை
நாசமாக்கி பார்த்தவளே..
இத்தாலி பெண்மணியே இரக்கமாயிறு
இல்லையென்றல் இறக்கநேரிடும் ....
ஈழத்தின் பிணவாடை இங்கே தெரியும்
அந்தநாளின் இத்தமிழகம் எரியும்...
No comments:
Post a Comment