வெடி விழுந்து எரிந்த பனை!
கரை உடைந்து காய்ந்த குளம்!
கூரை சரிந்த எமது இல்லம்!
குருதி படிந்த சிறு முற்றம்!
இருட்டை கிழிக்கும் தாயின் கதறல்!
இரத்தம் வழிந்த குழந்தை சடலம்!
கணவன் இழந்த எனது தங்கை!
ஆதரவு இன்றி திரியும் தோழன்!
சாலை எங்கும் பின குவியல்!
பாம்பு கடிக்கு பலிபோகும் மக்கள்!
பட்டினியில் சாகும் பாரதி இனம்!
பூச்சி கடிகுள் உறங்கும் பிள்ளை!
இறப்பதர்க்காக பிறக்கும் குழந்தை!
கட்டாய கருக்கலையபடும் கர்பிணி!
மௌனம் சாதிக்கும் சொந்த இரத்தம்!
காணமல் போகும் இளைஞர் கூட்டம்!
நடுரோட்டில் கற்பழிக்கப்படும் பெண்கள்!
உணவுதீர்ந்தும் வரிசையில் நின்ற சிறுமி!
தேச பதுங்குகுழியின் உள்ளே பதுங்கும் எம்சொந்தம்!
வேடிக்கைபார்க்கும் சமயமொழி ஒற்றுமைகொண்ட உறவு!
என் தோப்பினில் அடைந்த பூங்குரிவி எங்கு போனதோ!
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பசுவும் என்ன ஆனதோ!
விலகேத்திய மாடம்மெல்லாம் விழுந்தே போனதே!
ஊஞ்சள்ளாடிய அரும்பு இல்லை!
நீந்தி பழகிய கிணறு இல்லை!
முற்றம் தெளித்திட விடியல் வருமோ?
எந்த சாமத்தில் வாழ்வு முடியுமோ?
பூமி தாயே..என்ன பிழை செய்தார்கலடி தாயே..??
No comments:
Post a Comment