என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...
இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..
அடடா தமிழா.. எடடா படை நீ.. அடிமை விலங்கை உடைத்தெறி.. இடடா ஆணை.. கொடடா செந்நீர்.. இனத்தை காப்போம் நாள் குறி.. நடடா களத்தே.. எடடா கைவாள்.. நட உன் பகைவர் தலை பறி.. தொடடா போரை.. விடடா கணைகள்.. சுடடா எழட்டும் தீப்பொறி.. நீ சுடடா எழட்டும் தீப்பொறி.....
'பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!
செத்து மடிவது ஒருமுறைதானடா
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!'
தேடி சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழபருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையென்ன பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வெ னென்று நினைத்தாயோ….
இந்தியன், திராவிடன், என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது..... தமிழன் என்று சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஓட்டும்.....
'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர்
எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!'
எங்கோ இழைக்கப்படும் அநீதி உலகின் எல்லாப் பகுதிகளிலும் இழைக்கப்படுவதாக உணரவேண்டும்'
'நண்பர்களே! நம்முடைய தேர்வு வன்முறையா, அகிம்சையா என்பதன்று; அகிம்சையா, அழிவா என்பதுதான்'
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் குவிந்துள்ளன
எங்கள் பற்கள் கண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கின்றோம்
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்களை முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகு தோல்வியில் துவண்டுபோகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறுக்கும்
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!
சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்....
No comments:
Post a Comment