Saturday, October 17, 2009

thalaivan irukkiraan

காற்றே மூர்ச்சையாகும் கனத்த சொற்களை வீசாதீர்!
வீரத்தையும் விவேகத்தையும்
கொண்டவன் - அவற்றை
எப்போதும் சுகமாகத் தாங்கியவன்
தேசியத்தலைவன்
என்றே சொல்லுங்கள்

வாழ்வின்
இரண்டாம் பாகத்தில்
சோகத்துள் சோகமில்லாதவன்
தலைவன்
என்றே சொல்லுங்கள்

எப்போதும் தலைவனின்
தோற்றத்தையே எழுதுங்கள்
வெற்றியையும் தோல்வியையும்
கண்டவன்
இவனே என்று சொல்லுங்கள்

தலைவனை
நேசிக்கத் தெரிந்தவர்கள்
நீங்களென்றால்
வேறெதையும்
யோசிக்கத் தேவையில்லை
என்றே சொல்லுங்கள்

காற்றில்லாக் கிரகத்திலும்
வாழத்தெரிந்தவன் தலைவன்
தமிழன் கைகளில்
விலங்குகள் பூட்டி
கால்களுக்கு ஆணியடித்த
சிங்களத்தின்
பொய்ப் புழுகுகளை
அவசரமாகச் சுட்டெரிக்க
அக்கினியாக வருவான் தலைவன்
என்றே சொல்லுங்கள்

கழுத்துவரை
புதைக்கப்பட்ட இனமாகத்
தமிழினம் இருந்தாலும்
ஒரே ராகம் பாடும் இனம்
என்றே சொல்லுங்கள்

மருத்துவ மனைகளெல்லாம்
மரணராகம் பாடியபோதும்
வயிற்றுப் பசிக்கு
உணவே இல்லாத போதும்
இனத்தை நேசித்து
இனத்தோடு நின்றவன் தலைவன்
என்றே சொல்லுங்கள்

உலக மக்களால்
உரமிட்டு வளர்க்கப்பட்டவர்கள்
சுற்றி நின்றே உதைத்தபோதும்
தனியொருவனாக நின்றே
சமராடியவன் தலைவன்
என்றே தலைநிமிர்ந்து சொல்லுங்கள்

எக்காளம் வேண்டாம்
கடவுளோடு தலைவன் இல்லை
கடவுள் தலைவனோடு இருக்கிறான்
சூரியனைத் தொலைத்து விட்டு
இருளுக்குள் தேடுபவர்களே
காற்றே மூர்ச்சையாகும்
கனத்த சொற்களை வீசுபவர்களே
இறப்பே இல்லாதவன் தலைவன்
என்றே சொல்லுங்கள்
.............................
.........................
தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளையே
தமிழ் மக்களுக்காக வந்துதித்த கடவுளே
வழிகாட்டி எமையிணைத்த அண்ணனே
ஈழத்தை உயிராய் நினைத்த எம்தலைவனே

ஈழம் மலருமுன் உன்னுயிர் போகுமா?
சுதந்திரக்காற்றை சுவாசிக்காது போவாயா?
மக்கள்துயர் துடைக்காது விட்டுப்பிரிவாயா?
தீர்வு காணாமல் ஈழப்போர்தான் முடியுமா?

கடவுளுக்கு வயதுண்டா?
கடவுளுக்கு அழிவுண்டா?
கடவுளுக்கு எமனுண்டா?
எம்கடவுள் உனக்கு சாவுண்டா?

மிருகவம்சப்பேய்கள் கத்துகின்றன!
சாத்தானின் வாரிசுகள் ஆடகின்றன!
உனையழித்து வென்றதென துள்ளுகின்றன!
வரவிருக்கும் இழப்பைப்புரியாமல் கொண்டாடுகின்றன!

நீ இருக்கிறாய் என்பதுதான் உண்மை
உனையாறவிட்டு எழுவதே மக்களின் கடமை
எதிர்காலத்தில் அழியும் எம்மவரின் வறுமை
மறவோம் ஒன்றே எமது தலைமை

"போராட்ட வடிவங்கள் மாறலாம் எனினும் இலட்சியம் மாறாது�
என்ற உன் சிந்தனையை நாம் மறக்கவில்லை!
எம்மிடம் தந்த இப்பணியை நாம் மறுக்கவில்லை!
களத்தில் ஓய்வெடுக்க புலத்தில் நாம் எழுகிறோம்!
உம்முடன் சேர்ந்து உம்பணியில் இணைகிறோம்!

எதிரியின் வாயை அடக்க
அயல் நாட்டின் வாயைப் பிழக்க
தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்க
உன்பேச்சை எதிர்பார்த்து நிற்கின்றோம்!
ஆறதலைக்கேட்க உன்மக்கள் காத்திருப்போம்!!!ஆம் தமிழீழம் தெரிகிறது...!
பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு....
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடர்ந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராஜ்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!இனவெறி இருட்டுக்குள்
பக்கத்தில் இருந்தவனே ...
படுகுழி வெட்டினான் .
பகைவரோடு சேர்ந்து ....!
தேசம் விட்டுத் துரத்தி
தேசத்துரோகியாய்
இனங்காட்டியவனும் அவனே ...!

இப்படியொரு தலைவன்
இனியில்லை என்னும்படி
எம் தமிழினத்துக்காய்....
வாழ்ந்து வழிகாட்டியவனும்
அவனே ......!

முப்பதுவருடகாலம்
முடிகொண்டவனும் ...
அவனே..... !
முற்போக்குச் சிந்தனையாளனும்
அவனே ...!
முடிவில் நடப்பதை
அறியமாட்டானா ....?

பூகம்பத்தில் புதைந்துபோக
அவனென்ன ....
பூக்கம்பமா..?.
தப்பித்து ஓட....
அவனென்ன ...
தரங்கெட்ட சிங்களமா ...?

நிறங்கெட்ட எம் வாழ்வை
நினைத்து நினைத்து
வருந்தியவன் ....
நிர்க்கதியானான் என்பது
தவறு ...!
உன்னையொரு தமிழனாய்
உலகுக்குக் கட்டினானே ...!
இது போதாதா ?...சொல் !

என்ன நடக்கிறது ..?
ஈழத்தில் ....!
ஓடும் நதிகளில்
ஈழகீதம் ..இன்னும்
இசைக்கிறதாம்....!
எதிரிகளே ...!நிறுத்துங்கள் ...
இனவெறியைத் திணிக்காதீர்கள் ...!
இரத்த வாடை வேண்டாம் ...!
எமக்கொரு தலைவன்
எப்போதும் உள்ளான் ...

No comments:

Post a Comment