Saturday, October 17, 2009

mumbai muthuraj

எண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா தமிழா

மண்ணில் உன்னை வெல்ல யாருடா.... மரத் தமிழன் நீயடா...

உன்னைப் பிளவு படுத்தும் வீணணை வீழ்த்தடா... தமிழ்

அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா...

ஆறரைக்கோடி தமிழினமே நீ கிளர்ந்தெழுந்தால்

ஆழ் கடலும் வழி விடுமே அறியவில்லையோ?

எக்கணமும் புகழ் மணக்க இருந்தவரே.. நீவீர்

அக்கினியாய் கிளம்பாமல் அடங்கி இருப்பதேனோ?

பச்சிளம் பிஞ்சுகள் சருகாய் சாய்கிறதே

பால் மனம் மாறா பிள்ளைகள் பாடைகளில் போகிறதே

கோரத் தாண்டவமாடும் சிங்களன் வெறியாட்டத்தில்

வீர புலிக்குட்டிகள் விழுப்புண் தாங்கி மடிகிறதே!

கொதித்து எழடா தமிழா - உன் குருதி குடித்தவனை

மிதித்து வீழ்த்தடா தமிழா....

செத்து செத்து வாழ்வதை விட - தமிழீழம் மலர

வித்தாகி மடிவோம் வாடா தோழா!


தோழ்தருவோம் நம் புலிக்கூட்டம் தினவெடுக்க

வாழ் எடுப்போம் பகைவனின் கதை முடிக்க

நாள் குறிப்போம் தாயக விடியலுக்காக -

நம்பிப் போராடப் புறப்படடா என் தமிழா

No comments:

Post a Comment