எதை மறந்தோம்:
தமிழா தமிழா,கேட்டுப்பார் – இன
மானம் எங்கே உன் மனதிடம் கேட்பார்!
வானம் பார்த்த பூமியிலே -நம்
மானம் வாழ்ந்த பூமி ஈழமடா!
பெற்றமடி வெடிகுண்டு, பிறந்த இடம் சுடுகாடு.
பள்ளிகளோ பதுங்குகுழி, சுவாசமோ முடை நாற்றம்.
பசி..என்று எழுந்து நின்றால், நானும் கூட கரிகட்டை!
உள்ளங்கை ரேகை அழிந்த பின்னே -ஆயுல் ரேகை
ஜோசியமா…..? -நீ யார்
என்று சரித்திரம் கேட்ட்கையிலே
நானும் தமிழன் என்ற கைநாட்டா……?
நம் பொதுமறை என்ன மறை பொருளா- இத்தாலி
நமக்கு இறையாண்மை கற்பிக்க!
அடி பட்ட ரணங்களின் கதரல்களோ- நாம்
திரும்பி பார்க்க ஏங்குதடா!
இன உணர்வுகள் இல்லா மனிதனுக்கு பசிக்கான
உணவும் குப்பையடா!
இந்தியன் என்பதோடு நின்று விட்டோம், தமிழனையே
கொன்றுவிட்டோம்!
பணம் துப்பிய இடத்தில் வாக்குகள் குத்தினால்-ஓர்நாள்
தப்பிய இனத்தின் அகதியாய் அறிய படுவாய்!
நம் மீதும் எழுதப்படும் வரலாறு யுத்த வரலாறு அல்ல,
ஒரு இனமே செத்த வரலாறு!.-அதன்
குறிப்புககளில் சொல்ல படலாம் -நாம்
எதை மறந்தோம் என்று!
என் மானமே………ஈழமே……அறுந்து விழ்ந்தது
சதைகள் அல்ல, விதைகள்……….!
No comments:
Post a Comment